விருதுநகர் ரயில்வே ரோட்டில் உள்ள ஸ்ரீ ராமர் கோவில் வளாகத்தில் கிருஷ்ணர் சன்னதியில் கிருஷ்ணன் ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்கள் பூஜைகள் நடைபெற்றன விருதுநகர் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாக சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏராளமானவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேஷமிட்டு கோவிலுக்கு அழைத்து வந்தனர்