சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், திருவுடையார்பட்டியில், எம்.எஸ்.எம்.இ. துறை மூலம் வாழைநாரில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க 30 நாள் பயிற்சி வகுப்பு தொடங்கியது. புதன்கிழமை மதியம் 3 மணிக்கு நடந்த தொடக்க விழாவில் உதவி இயக்குனர் உமா சந்திரிகா, பொது மேலாளர் கிருஷ்ணன், வங்கி மேலாளர் பிரவீன் குமார், ஈ.டி.ஐ.ஐ. மேலாளர் சார்லஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பயிற்சி செப்டம்பர் 17 வரை நடைபெறும்.