தண்டையார்பேட்டை நேரு நகர் பகுதியில் அமைந்துள்ள நியாய விலை கடையில் பொருட்கள் சரியாக வழங்கவில்லை எனவும் மேலும் பொருட்களின் அளவு குறைவாக இருப்பதாக கூறி பயனாளி ஒருவர் கடை ஊழியர்களிடம் கேட்டதற்கு ஆபாசமான வார்த்தையில் பயனாளியை திட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் காலையில் பயனாளிகளிடம் குடும்ப அட்டையை வாங்கிவிட்டு மாலை வந்து பொருட்களை வாங்கிச் செல்லும்படி கடை ஊழியர்கள் கூறுவதாகவும் பயனாளிகள் தெரிவித்தனர்