திருப்பத்தூர் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் மாதாவின் பிறந்தநாள் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. செப்டம்பர் 8 அன்று, பெண் பக்தர்கள் மாதா சொரூபம் சுமந்து, கிறிஸ்துவ பாடல்கள் பாடியபடி ஊர்வலமாக வந்து வழிபாடு செய்தனர். தேவகோட்டை அருள்பணி சேவியர்ராஜ், பங்குத்தந்தை அற்புதஅரசு ஆகியோர் கூட்டு திருப்பலி நிறைவேற்றினர். மாலை அணிவித்து, தூப வழிபாடு, விருந்து உபசரிப்பு நடைபெற்றது.