கோவில்பட்டி அருகே உள்ள விஸ்வநாததாஸ் காலனி பகுதியில் பொதுப் பாதையை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்வதாக கூறப்படுகிறது பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் அப்பகுதி மக்கள் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார் தொடர்ந்து கோரிக்கை மனுவினை தாலுகா அலுவலகத்தில் வழங்கினர். இனியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக சாலை மறியல் போராட்டம் நடத்த போவதாக தெரிவித்தனர்.