திருச்சி கேகே நகர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன் இவர் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வருகிறார் சம்பவத்தன்று இவர் கேகே நகர் பகுதியில் உள்ள ஒரு கழிவறைக்குச் சென்ற போது அங்கு அறுந்து கிடந்த மின்சார கம்பியை தெரியாமல் மிதித்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து அவரது சகோதரர் கேகே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்