கோவை மாவட்டம் அன்னூரில் தமிழக ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் முப்பெரும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட முப்பெரும் விழா நடத்தப்பட்டது இந்த நிகழ்வில் பங்கேற்ற தமிழக ஆசிரியர் கூட்டணி தேசிய செயலாளர் அண்ணாமலை பேசுகையில் தமிழ்நாடு அரசு தேர்தலின் போது ஆசிரியர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் 50 தொகுதிகளில் தோற்கடிப்போம் என பேசினார்