வாணியம்பாடி அம்பூர்பேட்டை பகுதியில் உள்ள இந்து அரசு நிதியுதவி துவக்கப்பள்ளியில் இன்று காலை வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அஜிதா பேகம், நகர மன்ற தலைவர் உமா சிவாஜி கணேசன் ஆகியோர் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டனர் அதேபோல் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஐ.இ.எல்.சி அரசு நிதியுதவி துவக்கப்பள்ளியில் உதயந்திரம் பேரூர் கழக செயலாளர் ஆ. செல்வராஜ் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்து மாணவர்களுடன் உணவு அறிந்தார்.