திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் மேட்டு தெருவில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் மேட்டு தெருவின் ஒரு பகுதி சிமெண்ட் சாலை அமைக்கப்பட்ட நிலையில் மற்றொரு பகுதியில் சாலை அமைக்கப்படாமல் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர், அத்தகைய மறுபகுதியில் சாலை அமைத்து தர கோரி மக்கள் சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டனர்