சிவகங்கை மாவட்டம் பிரான்மலையில் ஷேக் அப்துல்லாஹ் தர்ஹாவில் சந்தனம் பூசும் விழா நடைபெற்றது. 2500 அடி உயர மலையில் மூன்று சந்தன குடங்கள் சம்மங்கி மலரால் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. அனைத்து மதத்தினரும் ஒன்று கூடி துவா ஓதி வழிபாடு செய்தனர். மின்விளக்கு அலங்கார ரதத்தில் சந்தன குடங்கள் ஊர்வலமாக சென்று, அதிகாலை மலை உச்சியில் விழா நிறைவு பெற்றது.