அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரவுடிகளின் ராஜ்ஜியம் ஒடுக்கப்படும் என்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்துள்ளார். "மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப்பயணத்திற்காக திண்டுக்கல் வந்திருக்கும் அவர்,அங்குள்ள தனியார் விடுதியில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து சங்க பிரதிநிதிகள் மற்றும் வணிகர்களுடன் ஆலோசனை நடத்தினார்.