சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மாலை நேரத்தில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் மிதமான மழை பெய்தது.