தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மற்றும் அக்குவா அவுட் பேக் அமைப்பு சார்பில் மூன்றாவது ஆண்டாக தேசிய அளவிலான கடல் நீர் சாகச விளையாட்டு போட்டி தூத்துக்குடி முத்து நகர் கடற்கரையில் இன்று துவங்கியது. இப்போட்டியில் இந்தியா முழுவதும் இருந்து தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கோவா, பெங்களூர், கேரளா உள்ளிட்ட 10க்கு மேற்ப்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.