தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி தலைவர் மற்றும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர் குழு தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முதற்கட்டமாக தூத்துக்குடி மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலகத்தை ஆய்வு செய்தனர்.