தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நேற்று மாலை 18 ஆயிரம் கனஅடி யாக வந்தது.இந்த நிலையில் கர்நாட காவில் பெய்த மழை குறைந்தது. இதனால் நீர் திறப்பு குறைக்கப் பட்டுள்ளது. இதையடுத்து இன்று சனிக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இதனால் மெயின் அருவி. சினிபால்ஸ், ஐந்து அருவி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது.