புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாதத்தின் முதல் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறுவதால் அனைத்து உயர் அதிகாரிகளும் வருகை புரிந்தனர். ஏராளமான பொதுமக்கள் புகார் மனு வழங்க வந்ததை தடுத்து நிறுத்திய போலீசாரால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தை பொதுமக்கள் ஈடுபட்டதால் ஆட்சியராக வாசலில் பரபரப்பு காணப்பட்டது.