சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள அழகாபுரி பகுதியைச் சேர்ந்த தேனப்பன் (வயது 25) வீட்டில் திருட்டு சம்பவம் நடந்தது. அவரது இல்லத்தின் பூட்டை உடைத்து, நகை, பணம், கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களை அடையாளம் தெரியாத மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக தேனப்பன் காளையார் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.