ஒட்டன்சத்திரம் ஒன்றியம் கேதையுறம்பு அருகே உள்ள திப்பம்பட்டி கிராமத்திற்கு அரசு பேருந்து வசதி இல்லாமல் இருந்து வந்தது. இதனை அறிந்த அமைச்சர் சக்கரபாணி உத்தரவின் பேரில் அந்த கிராமத்திற்கு புதிய பேருந்துஇயக்கப்பட்டது. திப்பம்பட்டியில் தொடங்கிய புதிய பேருந்தை ஒட்டன்சத்திரம் மத்திய ஒன்றிய செயலாளர் எஸ் ஆர் கே பாலு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய ஒன்றிய துணைச் செயலாளர் முருகானந்தம், சிவபாக்கியம், ராமசாமி, மாவட்ட பிரதிநிதி சண்முகம், வேலுச்சாமி, பாலசுப்பிரமணி, சுப்புராஜ், கேசவன், பிரசாந்த் மற்றும் பலர் பங்கேற்றனர்.