திருப்பூரில் நூல் பண்டல்களை இறக்கிவிட்டு வேடசந்தூரை நோக்கி லாரி வந்து கொண்டிருந்தது. லாரியை வெள்ளையகவுண்டனூரைச் சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டி வந்தார். லாரி சேனன் கோட்டையில் வந்த பொழுது வேகத்தடையில் ஏறுவதற்காக முன்னாள் சென்ற நூற்பாலை தொழிலாளர்களை ஏற்றி சென்ற வேன் பிரேக் போட்டதால் வேனின் பின்பக்கமாக லாரி மோதியது. இதில் வேனில் பயணம் செய்த மூன்று பெண் தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை.