சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் முத்துக்குமார், பிரமனூர் கால்வாய்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது TN59 CR 1758 என்ற எண் கொண்ட இருசக்கர வாகனத்தில் வந்த வடகரை பகுதியைச் சேர்ந்த அருள் பாண்டி (23) மற்றும் திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், கையில் வாளை வைத்துக் கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தியதாக தெரியவந்தது.