சிவகங்கை மாவட்டம் தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் வருடம் தோறும் பங்குனி மாதத்தில் நடைபெறும் பொங்கல் விழாவில், தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது. இக் கோயிலில் கடந்த சில வருடங்களாக நடைபெற்ற மராமத்து பணிகள் கடந்த வருடம் நிறைவடைந்து, கும்பாபிஷேகம் நடைபெற்றது.