நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான அரியலூர் நகரின் இருபுறமும் உள்ள தற்காலிக கடைகள் கடைகள் மற்றும் கடைகளின் முன்பு உள்ள ஆக்ரமிப்புகள் அகற்றும் பணி நேற்று முன்தினம் தொடங்கி இன்று வரை நடைப்பெற்று வருகிறது. இதில் திருச்சி சாலை, செங்கரை சாலை ஜெயங்கொண்டம் சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆக்ரமிப்புகளை ஜேசிபி இயந்திரம் கொண்டு நெடுஞ்சாலை துறையினர், வருவாய் துறையினர், நகராட்சி நிர்வாகத்தினர் அகற்றி வருகின்றனர்.