அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள வண்ணம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். வயது 65. இவர் தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற போது மின்சார கம்பி அறுந்து கிடந்தததை கவனிக்காமல் சென்றுள்ளார். பின்னர் அதனை மிதித்த நிலையில் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே நேற்று உயிர் இழந்துள்ளார்.