சிவகங்கை சாஸ்திரி தெருவைச் சேர்ந்த ஜாகிர் உசேன்,(வயது 50) குடும்ப பிரச்சினையால் வீடு விட்டு வெளியே தனியாக வசித்து வந்துவருகிறார். சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு டாப்லெஸ் ஸ்கேன் எடுக்க ரேஷன் கார்டு அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதையடுத்து தந்தையரிடம் இருந்து ரேஷன் கார்டை பெற்ற ஜாகிர் உசேன் அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில், அந்த குடும்ப அட்டையில் அவரது பெயர் நீக்கப்பட்டிருந்தது.