திண்டுக்கல் மலைக்கோட்டையில் அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர் ஆலயம் உள்ளது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் வருடம்தோறும் ஏராளமானோர் கிரிவலம் செல்வர். அதேபோல் இந்த ஆண்டு வேடசந்தூர் அபிராமி அம்மன் பக்தர்கள் குழுவின் சார்பில் குங்கும காளியம்மன் கோவில் தெருவில் இருந்து கடந்த ஒரு வாரமாக விரதம் இருந்து வீட்டில் முளைப்பாரி வளர்த்து அதனை ஊர்வலமாக கொண்டு வந்து விநாயகர் கோவிலில் வைத்து வழிபட்டு பின்பு கிரிவலம் செல்வதற்காக எடுத்து சென்றனர்.