சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மேலப்பசலைப் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரிக்கு செல்கிறேன் என கூறி வீட்டிலிருந்து சென்ற சிறுமி மீண்டும் திரும்பவில்லை. அக்கம் பக்கத்திலும் தேடியும் கிடைக்காததால், பெற்றோர் மானாமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.