வடமதுரை ஒன்றியம் கொம்பேறிபட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். தாசில்தார் சுல்தான் சிக்கந்தர், ஊராட்சி உதவி இயக்குனர் சீனிவாசபெருமாள் முன்னிலை வகித்தனர். முதல்வரின் முகவரி, வருவாய், விவசாயம், எரிசக்தி துறை உள்பட பல துறைகள் சார்ந்த ஸ்டால்கள் அமைக்கப்பட்டு மனுக்கள் பெறப்பட்டன. வடமதுரை ஒன்றிய தி.மு.க., செயலாளர்கள் சுப்பையன், பாண்டி, அய்யலுார் பேரூராட்சி தலைவர் கருப்பன், மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் சொக்கலிங்கம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.