சிவகங்கை பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அடைக்கலம் காத்தவிநாயகர் கோவிலின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று இரவு சுமார் 8 மணி முதல் 10 மணி வரை மேடை அமைத்து பாடல், ஆடலுடன் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஏற்கனவே பேருந்து நிலையம் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், ஒரு பகுதி மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. அந்த ஒரே பகுதியில் தினமும் ஏராளமான பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.