தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது.இம்முகாமினை மாவட்ட கலெக்டர் சதிஷ் நேரில் பார்வையிட்டு மருத்துவ சேவைகள், ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை மற்றும் மாற்று திறனாளிகளுக்கான சான்றிதழ்களை வழங்கினார்.