சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இளையான்குடி வடக்கு ஒன்றியத்தில் உள்ள பெரும்பச்சேரி, இளம்மனூர், கீழாய்குடி, நகரக்கூடிய உள்ளிட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த மக்களுக்கான “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் பெரும்பச்சேரியில் நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப. மதியரசன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், 800-க்கும் மேற்பட்ட மனுக்கள் மக்களிடமிருந்து பெறப்பட்டன.