திருச்சி மாவட்டம் கல்லுக்குழி ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்த அழகப்பன் (76) என்பவருக்கு காரைக்குடியில் ரூ.97.50 லட்சம் மதிப்பிலான வீடும் நிலமும் உள்ளது. இதை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கில், ஆள்மாறாட்டம் செய்து, அரசை ஏமாற்றி, போலி பட்டா பெற்று, போலி ஆவணங்களைத் தயாரித்துள்ளனர். பின்னர் அவற்றை உண்மையானதாக பயன்படுத்தி கிரயப்பத்திரங்களையும் பதிவு செய்துள்ளனர்.