வேடசந்தூர் ஆத்து மேடு அய்யனார் நகர் வாய்க்கால் கரை மற்றும் சிக்ராம் பட்டி பகுதியில் உள்ள கோவில்களில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக ஆத்து மேட்டில் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தம் தாரை தப்பட்டை முழங்க வான வேடிக்கை முழங்க ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதே போல் சிக்ராம்பட்டியலும் நடைபெற்றது. பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.