தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை சிதைப்பதைக் கண்டித்து அகில இந்திய விவசாயத்தொழிலாளர் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்துக்கு ஒன்றியத்தலைவர் பி. தனசேகரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் முத்துலெட்சுமி, லெட்சுமி சௌமியா, சண்முகவள்ளி, சித்ரா கருப்புச்சாமி, ஆனந்தவள்ளி, வாணி, மருதம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.