சிவகங்கை மாவட்டம் காளையர் கோவில் அருகே உள்ள முடிதானை பகுதியைச் சேர்ந்த மணவாழன் (36), தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு மையம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத மற்றொரு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் அவர் காயமடைந்தார்.