சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் வருடந்தோறும் ஆடித்தபசு விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான ஆடித்தபசு திருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழா நாட்களின் போது அம்மன் தினந்தோறும் இரவு சிம்மம், அன்னம்,கமலம், யானை,கிளி விருஷபம் காமதேனும்,குதிரை உள்ளிட்ட வாகனங்களிலும்,பூப்பல்லக்கு,சப்பரம் ஆகியவற்றில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது இன்று மாலை ஆனந்தவல்லி அம்மன் தபசு கோலத்தில் எழுந்தருளினார்.