அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 23- ஆம் தேதியன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். மேலும் அரியலூர் மாவட்டத்தில் போதுமான அளவு உரங்கள் கையிருப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தகவல்.