தர்மபுரிமாவட்டம், காரிமங்கலம் அருகே அடிலம் கிராமத்தில் உள்ள ஏரியில் மண் கடத்துவதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் காரிமங்கலம் தாசில்தார் மனோகரன் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் விரைந்து சென்றனர், அதிகாரிகளை கண்டதும், மண் திருட்டில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடி தலைமறைவாகினர். இதையடுத்து.சி.பி.எந்திரம், டிப்பர் மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்து காரிமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் மண் கடத்தியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க புகார் அளித்தனர்.