வேடசந்தூர் மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரே தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் இரவு நேரத்தில் தானாக சைரன் அடிக்க தொடங்கி விடுகிறது. ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை அடித்து விட்டு தானாக நின்று விடுகிறது. இது கடந்த ஒரு மாதமாக தொடர்கதையாகவே உள்ளது. இது குறித்து வங்கி மேலாளர் இடம் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தும் தொடர்ந்து கண்டு கொள்ளாமலேயே இருந்து விடுவதாக அப்பகுதியினர் வேதனை தெரிவிக்கின்றனர். திடீரென நள்ளிரவு நேரத்திலும் சைரன் ஒலிப்பதால் மக்கள் தூங்க முடியாமல் தவிக்கின்றனர்.