வேடசந்தூர் அருகே உள்ள பெருமாள் கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் நாகேந்திரகுமார் (வயது 40) நூற்பாலை தொழிலாளி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் விட்டல் நாயக்கன்பட்டியை நோக்கி சென்று கொண்டிருந்தார். பேட்டரிக் பள்ளி முன்பாக சென்ற பொழுது சாலையை கடப்பதற்காக பேரிகார்டு வைத்திருந்த இடத்தில் செல்லும் பொழுது பின்னால் வந்த கார் உரசி விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் நிலை தடுமாறிய நரேந்திரகுமார் பேரிகார்டின் மீது மோதி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.