தமிழன்டா சங்கமம் சார்பில் இரண்டாவதாக ஆண்டாக மினி மாரத்தான் போட்டி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு இன்று நடைபெற்றது. மாணவர்களிடையே உடற்பயிற்சி மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்படுத்தும் விதமாக நடைபெற்ற இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில், சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு கொடியசைத்து மினி மாரத்தான் போட்டியை துவக்கி வைத்தார்.