வேடசந்தூர் அருகே உள்ள குட்டம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், பூங்கொடி, வீரராஜ் ஆகியோர் ஒரு இருசக்கர வாகனத்தில் வேடசந்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்களது பின்னால் மன்னார்கோட்டை கரட்டுபட்டியை சேர்ந்த சூர்யா, ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் வேடசந்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இரண்டு இரு சக்கர வாகனங்களும் எதிர்பாராத விதமாக ஒன்றுடன் ஒன்று உரசி நடுரோட்டில் விழுந்தனர். இதில் 5 பேரும் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு இரண்டு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்து.