தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் தமிழக அரசு அறிவித்த மானியத்தில் வழங்கக்கூடிய மக்காச்சோள விதைகள் மற்றும் இடுபொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்படாமல் உள்ளதாகவும், எனவே அதனை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது.