குஜிலியம்பாறையில் மணப்பாறை செல்லும் ரோட்டில் அப்பார்ட்மெண்ட் குடியிருப்பு உள்ளது. 24 ஆம் தேதி இரவு இரண்டு இருசக்கர வாகனங்களில் முகமூடி அணிந்து வந்த ஐந்து இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளையும் நோட்டமிட்டு சென்று விட்டு மீண்டும் திரும்பி வருகின்றனர். அதன் பிறகு அப்பார்ட்மெண்ட் கேட்டிற்குள் நுழைந்த ஒரு இளைஞர் முனீஸ்குமரன் என்பவரது வாகனத்தில் வைத்திருந்த ஹெல்மெட்டை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். அதன் பிறகு அனைத்து பகுதிகளையும் நோட்டமிட்டவாறு சென்றுவிட்டனர். தற்பொழுது அதன் சிசிடிவி காட்சி வெளியாகிஉள்ளது.