புதுக்கோட்டை ANS ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். கட்சி துவக்கி 21 ஆம் ஆண்டு துவக்க விழா மணப்பாறையில் நடைபெற இருப்பதாகவும், 2026 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் நடைபெறும் எனவும், கட்சித் துவக்கியதற்காக அதிகமாக இழந்தது உலகிலேயே தேமுதிக தான் எனவும், நடிகர் விஜய் துவக்கி உள்ள கட்சி பற்றி தற்போது விமர்சனம் செய்ய முடியாது என தெரிவித்தார்.