சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள கண்ணாயிருப்பு பகுதியைச் சேர்ந்த அனிதா (27). இவர் டீ.கல்லுப்பட்டி பகுதியில் உள்ள தனியார் அகாடமியில் படித்து வந்தார். சமீபத்தில் சொந்த ஊருக்கு திரும்பிய அவர், படமாத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தமிழ் வழி சான்றிதழ் பெறச் சென்றார். ஆனால் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அனிதாவின் தந்தை திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.