சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வைகை ஆற்றங்கரை பகுதியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமுடன் தொடர்புடைய மனுக்கள் கிடைக்கப்பெற்றதாக ஊடகங்கள் மூலம் தகவல்கள் வெளியாகியிருந்தது. இதையடுத்து, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.