தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சியில் உள்ளத்தில் பெட்ரோல் குண்டு வீசி பேரூராட்சி தலைவரும் பாமக மாவட்ட செயலாளருமான ஸ்டாலினை கொல்ல முயற்சி நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் இளையராஜா, அருண் என இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் நாலு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.