சிவகங்கை நகரின் முக்கிய சாலைகள், சந்திப்புகள், பேருந்து நிலையம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அதிமுகவில் வெளியே சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கருத்துக்கு நன்றி தெரிவித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவிக்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.