தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிழ்முன் அன்சாரி தூத்துக்குடி அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது. ஆனால் ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்தி இருப்பது ஏற்று கொள்ள முடியாதது. காவல்துறையும், உளவுத்துறையும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.