சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட இளமனூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த கொம்படி மதுரையில், ரூ.7 லட்சம் 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நாடக மேடை அரங்கத்தை, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப. மதியரசன் முன்னிலையில் திறந்து வைத்தார்.